Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உங்களை மட்டுமே நம்புங்கள்

உங்களை மட்டுமே நம்புங்கள்

உங்களை மட்டுமே நம்புங்கள்

உங்களை மட்டுமே நம்புங்கள்

ADDED : செப் 21, 2008 06:06 PM


Google News
Latest Tamil News
<P>* எல்லா மனிதர்களிடமும் குறைபாடு இருக்கிறது. தவறு செய்யும் ஒருவரை நீங்கள் ஆட்காட்டி விரலை நீட்டி சுட்டிக் காட்டுகிறீர்கள். அப்போது, அந்த விரல் மட்டுமே எதிரே இருப்பவரை நோக்கியிருக்கும். மற்ற மூன்று விரல்கள் உங்களது உள்ளங்கையை நோக்கியே இருக்கும். அதாவது நீங்கள் சுட்டிக்காட்டுபவரிடம் ஒரு குறை இருப்பதாக உங்களுக்கு தெரிந்தால், உங்களிடம் மூன்று குறைகள் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது. அடுத்தவனை சுட்டிக்காட்டும் வேளையில் உங்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையிலிருந்து விலக முடியாது என்பதற்காகவே கட்டை விரல், அந்த மூன்று விரல்களை அழுத்தியபடி இருக்கிறது. எனவே, யாரிடமும் குறைபாடு கண்டு புறம் பேசாதீர்கள். </P>

<P>* நீங்கள் செல்ல வேண்டிய பாதையை நீங்களே தீர்மானியுங்கள். அந்த பாதையை தேர்ந்தெடுக்கும் முன்பு, அவ்வழியே செல்வதால் ஏற்படும் நன்மை, தீமையை ஆராய்ந்து பாருங்கள். அதனால் மிகச்சிறிய அளவேனும் அடுத்தவர்களுக்கு தீமை விளையும் என தெரிந்தால், எவ்வளவு லாபம் கிடைத்தாலும் அதில் செல்லாதீர்கள். அப்பாதையில் போகும்போது தன்னம்பிக்கையுடன்தான் போக வேண்டுமே தவிர, அடுத்தவர்களை நம்பி செல்லக்கூடாது. அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை உங்கள் மீது வையுங்கள். பார்வை சரியாக இருப்பவர்கள்தான், தாம் செல்லும் வழியில் பாதுகாப்பாக செல்ல முடியும். அடுத்தவரை நம்பி சென்றால் செல்ல வேண்டிய இடத்தை அடையமுடியாது.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us